ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, October 21, 2013

திருமண விதிகள் - களத்திர, புத்திரதோஷம் ஆய்வு


சந்தோஷமான திருமணவாழ்க்கை
செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை .
3 ம் அதிபதி 7 ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது.
7 ம் அதிபதி 3ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. .
குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
சந்திரன் இராகு சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.

5ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம் 
2 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
2 ல் அஸ்தமன கிரகம் இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் இது துரஷ்ட நிலையை காட்டுகிறது.
சனி மிதுனம் - மீனம் இராசியை பார்தால் திருமண வாழ்க்கை இயந்திர வாழக்கை போன்றது.

களத்திர தோஷம் ஆண் பெண் ஜாதகத்தில் எந்த வகையான பலனைத்தருகிறது என்பது பற்றி இப்பக்கத்தில் விரிவாக காணலாம்.

களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும்.  களத்திர ஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும்..இந்த 7வது வீடு பாபக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.

ஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும்.  2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும்.  8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும், ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது.  ஆண் பெண் ஜாதகங்களில் இந்த வீடுகளில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருப்பது மிகவும் நலம்.  அப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது  ஆண் பெண் ஜாதகங்கள் இரண்டிலும்  2,7,8 ஆகிய வீடுகளில் கிரகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால்; வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2வது இடத்திலும் 7வது இடத்திலும் சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உண்டு எனக் கூறலாம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில்  சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன்  களத்திர தோஷத்தைத் தருகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன்  எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி.

7ம் வீட்டுஅதிபருடன் சூரியன் இணைந்திருந்தாலும் களத்திரதோஷம் உண்டு என்று கூற வேண்டும்.  ஏனென்றால் சூரியனுடன் இணைந்த அந்தக் கிரகம் அஸ்தங்கம் ஆகிவிடும். விதிவிலக்கு தனுர் லக்கினகாரர்களுக்கு மட்டும்.

ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லை (அல்லது) இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான  ஜோதிட விதிகள் பின்வருமாறு:

(1)  2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும்.

(2)
 2,7,8ம் வீடுகளில்  பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ,

        பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது.  

(3)
  7ம் இடத்துக்குரிய  அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள்
    பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும்.

(4)
  லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில்
    சுபக் கிரகம் இருக்க வேண்டும்.

(5)
  7வது இடத்ததிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற
    ஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின்
    பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு
    கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
    அமையும்.
    அதாவது 7ம் வீட்டதிபரும் கெட்டிருக்கக்கூடாது, களத்திர
    காரகன் சுக்கிரனும் கெட்டிருக்கக்கூடாது.


புத்திர தோஷம்
5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி  இருக்காது
5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி  இருக்காது
5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது
5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .
5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை 
5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை
செவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
செவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்
கேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்
பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது )


இவை அனைத்தும், குரு பார்தால் தோஷம் குறையும். கனவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகம் நன்றாக இருந்தாலும், அவர்களை வைத்து  புத்திரபிராப்தி கிடைக்கும். பரிகாரம் செய்து தோஷம் நிவர்த்தி செய்து விடமுடியும்


மனக்கசப்பு, திருமணப்பிரிவு
7ல்ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
சுக்கிரனுக்கு 4 ல் சனி இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
சுக்கிரனுக்கு 4 ல் இராகு இருந்தால் சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது.
சுக்கிரனுக்கு 10ல் சனி இருந்தால் கணவனுடன் ஒத்துபோகாத பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவதும் கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கிறார்.
சுக்கிரன் 4,8,12 ல் இருந்தால், கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
செவ்வாய் 4,8,12 ல் இருந்தால் எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
கேது 4,8,12 ல் இருந்தால் எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், 
பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை.
 ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.
பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருந்தால் இருப்பது சிறப்பில்லை.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருந்தால் - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.
பெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.
ஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி கிரகம் நீசம் பெறுவதால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும், கணவனுக்கு சரிவர பணிவிடை செய்யாமல் இருப்பதும் தருகிறது.
ஆண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் பெண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருந்தால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.


திருமண நட்சத்திர பொருத்த பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்

செவ்வாய் தோஷம்:
ஒரு பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பையனின் ஜாதகத்திலோ செவ்வாய், லக்கினத்திற்கு 2-4-7-8-12-ம் இடத்தில் அமைய பெற்றிருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு ஆணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால், அதேபோல் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகவரன்தான் பொருந்தும். அதாவது – O Positive ரத்தவகையை சேர்ந்தவருக்கு அதே O Positive வகை ரத்தம் ஏற்றினால்தான் அந்த உடல் ஏற்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம். அதுபோலதான், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் திருமண வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து தரும்.

சர்ப்ப தோஷம்
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள் என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.

மற்ற திருமண விதிகள்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage) 
 2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage). 
 3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும் 
 4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . 
 5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். 
 6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். 
 7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள் 
 8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள். 
 9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள். 
 10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான். 
 11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது. 
 12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான் 
 13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும் 
 14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும். 
 15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன். 
 16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். 
 17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! 
 18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் 
 19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும் 
 20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான் 
 21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
 22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும். 
 23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள். 
 24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும 
 25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள். 
 26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும். 
 27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது. 
 28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். 
 29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை! 
 30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள். 
 31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்! 
 32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும். 
 33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும் 
 34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது. 
 35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது. 
 36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும் 
 37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும். 
 38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!. 
 39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள். 
 40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். 
 41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான். 
 42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான். 
 43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான். 
 44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள். 
 45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

மேலும் திருமண பொருத்தம் பற்றிய அடிப்படை தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்